இந்தியாவில் 267 காவல்நிலையங்களில் தொலைபேசி வசதி இல்லையா?
நாடு முழுவதிலும் உள்ள காவல்நிலையங்களில் தொலைபேசி வசதி மற்றும் வயர்லெஸ் வசதி இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள காவல்நிலையங்களில் தொலைபேசி வசதி மற்றும் வயர்லெஸ் வசதி இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் 15,650 காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில், 863 காவல் நிலையங்களுக்குச் சொந்தக் கட்டடம் இல்லை. 273 காவல் நிலையங்களில் புதிய வாகனங்கள் இல்லை. 267 காவல் நிலையங்களில் தொலைபேசி வசதி இல்லை. 129 காவல் நிலையங்களில் வயர்லெஸ் வசதி இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அழைப்பு முறிவு தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காததால் பிஎஸ்என்எல், ஐடியா ஆகிய இரு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.