விடிஷா மாவட்ட மையத்திலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள சங்க்லா கிராமத்தில் 28 வயது பெண் ஒருவர் கைகால்கள் இல்லாத குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், கை மற்றும் கால்கள் இன்றி குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த செய்தி மருத்துவ உலகத்தையே அதிரவைத்துள்ளது. இந்த குழந்தை ஆணா இல்லை பெண்ணா என்று கூட இன்னும் கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.


இது எங்கள் மூன்றாவது குழந்தை என்றும், எங்களுக்கு முன்பு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் என்றும் குழந்தையின் தந்தை தெரிவித்தார். 


பிறவு கோளாறுடன் பிறந்துள்ள இந்த குழந்தை Tetra-Amelia என்ற நோய் அறிகுறியுடன் பிறந்துள்ளது. இது கை மற்றும் கால்கள் இல்லாததை வகைப்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். Sironj Tehsil-யில் இருக்கும் Rajiv Gandhi Smriti மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர், குழந்தை முற்றிலும் நலமாக உள்ளது. ஆனால் குழந்தையின் உட்புற உறுப்புகள் சரியாக வளர்ந்திருக்கிறதா என்பதை அறிவதற்கு பல சோதனைகள் தேவை என்பதால், மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லும் படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  


Tetra-Amelia நோய் அறிகுறி என்பது WNT3 மரபணுவில் உள்ள பிறழ்வுகளால் ஏற்படும் ஒரு மரபணு கோளாறு. இது மிகவும் அரிதானது. 100,000 புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த நோய் பாதிக்கிறது. தன்னுடைய வாழ்க்கையில், இது தான் முதல் வழக்கு என்று அவர் கூறியுள்ளார்.