ஆந்திராவில் தர்காவின் வெளியே உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிச்சைகாரரின் பையில் 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் இருந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர மாநிலம் மதனபள்ளியை சேர்ந்த 75 வயதான பஷீர் சாப், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அனந்தபுரம் மாவட்டம் குந்தக்கல்லில் உள்ள தர்காவின் வெளியே பிச்சை எடுத்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். 


இந்த நிலையில் நேற்று காலை பஷீர் நீண்ட நேரமாக எழவில்லை. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர் தூங்குவதாக நினைத்தனர். ஆனால் மாலை வரை அவர் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் பஷீரை தட்டி எழுப்பினர். அப்போது அவர் இறந்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பஷீரின் சடலத்தை குந்தக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பின்னர் போலீசார் பஷீர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், அதில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 670 ரூபாய் பணம் இருந்துள்ளது. உயிரிழந்த பஷீரின் உறவினர்கள் குறித்து தகவல் கிடைக்காததால் பணத்தை கைப்பற்றிய போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 


12 ஆண்டுகளாக தர்கா முன்பு பிச்சை எடுத்து வந்த பஷீர் யாரிடமும் பேசமாட்டார். தான் சித்தூரை அடுத்த மதனப்பள்ளியில் இருந்து வந்ததாக மட்டுமே அங்குள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவரை பற்றிய மற்ற விவரங்கள் தெரியவில்லை.