மூன்று மாதம் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால் பயனாளிகளின் குடும்ப அட்டையை ரத்து செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் நேற்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடுநடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். மாநாடு முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாஸ்வான், "பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேர்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். பொருட்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேர்கிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 
 
மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைதாரர்களை கண்காணித்து அவர்களின் குடும்ப அட்டையை மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். அதேபோன்று ரேஷன் பொருட்கள் தேவைப்படாத பொருளாதார நிலையில் உயர்ந்த குடும்பங்களின் அட்டையையும் ரத்து செய்யலாம். 


இதன் மூலமாக நாட்டில்ஏழைகளுக்கு உணவில்லா நிலையை தடுக்க முடியும். ரேஷன் கடைகளுக்கு வர இயலாதவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மானிய விலையில் உணவு தானியங்களை விநியோகிக்க வேண்டும்" என்றார்.