மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 30 அடி முதல் 35 அடி ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை தவறி விழுந்தது. குழந்தையை மீட்கும் பணியில் எல்லை பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். அருகிலேயே மற்றொரு சுரங்கமும் தோண்டப்பட்டு குழந்தையை மீட்டனர். குழந்தை மயங்கிய நிலையில் காணப்பட்டதால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 


குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறினார். குழந்தை உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிவதற்காக பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் அடிக்கடி விழுந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.