பாஜக-வின் கோட்டை என கருதப்படும் குஜராத்தில், இன்று முதற்கட்ட வாக்குபதிவு துவங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக-வும் அந்தக் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் பல யுக்திகளை கையாண்டு வருகின்றன. 


நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தல் அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளது.


இந்த தேர்தலில் முதற்கட்டமாக இன்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. 


இதற்கான வாக்குபதிவு காலை 8 மணி முதல் துவங்கியது, மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து செல்கின்றனர்.


காலை 8 மணி முதல் 2 மணி வரை நடை பெற்ற வாக்குப்பதிவில் சுமார் 35.52% வாக்காளர்கள் வாக்குபதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.