டெல்லியின் பிரபல பள்ளி ஒன்றியில் பயிலும் 4-வயது சிறுமி; பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் பெற்றோர் POSCO சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தைகளின் பாதுகாப்பு, பாலியல் குற்ற சட்டத்தின் (POSCO Act) கீழ் டெல்லி  மாணவர்கள் சிக்கியுள்ள விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் வகுப்பு தோழர்கள் அல்லது அப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் ஒருவர் தனது 4-வயது மகளினை பாலியல் ரீதியாக தூண்டியுள்ளதாக சிறுமியின் தாயார் ரன்ஹோலா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.



பாதிக்கப்பட்ட சிறுமியின் பாலுறுப்பிற்கு அருகாமையில் ஏற்பட்டுள்ள காயம் எவ்வாறு ஏற்பட்டது என்பதினை சிறுமியால் கூற இயலாத பட்சத்தில், சிறுமியின் பெற்றோர் சிறுமியின் பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் அளித்துள்ளனர்.


இந்த விவகாரம் தொடர்பாக துணை ஆணையர் சிஜு பி குருவிலா தெரிவிக்கையில்... சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட சிறுவனின் மீது POCSO சட்டம் பிரிவு 6-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்!