கடந்த 2016 ஆண்டிற்கான விபத்து குறித்த மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிக்கையை வெளியிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில், கடந்த 2016 ஆண்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு 55 சாலை விபத்துகள் நடந்து 17 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 


ஒருநாளை கணக்கிட்டால் 400க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் நேரிட்டுள்ளன. முந்தைய ஆண்டை காட்டிலும் சாலை விபத்துக்கள் 4.1 சதவீதம் குறைந்துள்ள போதிலும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது. 


கடந்த 2016 ஆண்டு இந்தியாவில் மொத்தம் 4,80,652 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதில் 1,50,785 பேர் மரணமடைந்துள்ளனர். 4,94,624 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 46.3% பேர் 18 - 35 வயது வரை உள்ளவர்கள். 


மேலும் 86% விபத்துகள் 13 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளன. அவை "தமிழ்நாடு, மத்தியப்பிரேதேசம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், குஜராத், தெலுங்கானா, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், அரியானா, கேரளா, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா". இந்த் 84% விபத்துக்களில் ஓட்டுநரின் தவறு காரணமாகவே நடைபெற்றுள்ளது.