இந்தியாவில் இதுவரை தலைகவசம் அணியாமல் வாகனத்தில் சென்ற 43,600 பேர் பலியாகியுள்ளதாக தகவல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் கடந்த 2018 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டிகளில் சுமார் 43 ஆயிரத்து 600 பேர் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது 2017 ஆம் ஆண்டை விட 21 விழுக்காடு அதிகமாகும். அதே போல் 2018 ஆம் ஆண்டில் தலைக்கவசம் அணியாததால் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் 15 ஆயிரத்து 360 பேர் பலியாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குஜராத்தில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளில் 958 பேரும், பின்னால் அமர்ந்து பயணித்தவர்களில் 560 பேரும் கடந்த ஆண்டில் விபத்துகளில் பலியாகியுள்ளனர். ஜார்கண்டில் வாகன ஓட்டிகள் 790 பேரும், பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் 450 பேரும் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்துள்ளனர்.


இந்த பட்டியலில் 6,020 உயிரிழப்புகளுடன் உத்தர பிரதேசம் முதலிடமும், 5,232 உயிரிழப்புகளுடன் மஹாராஷ்டிர மாநிலம் 2வது இடமும் பிடித்துள்ளன. தமிழகத்தில் 5,48 இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாததால் கடந்த ஆண்டில் உயிரிழந்துள்ளனர். அதே போல் சீட்பெல்ட் அணியாமல் கார்களில் பயணித்த 24,400 பேர் விபத்துகளில் பலியாகியிருப்பதாகவும் இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


இதேபோல், கடந்த ஆண்டு, காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்று,24,400 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவும் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம்.