ஸ்ரீநகர் :  பாராமுல்லா மாவட்ட வடக்கு காஷ்மீரின் பயங்கரவாதிகள் அதிகம் நடமாட்டமுள்ள பகுதிகளில் ராணுவம், பிஸஎப் ராணுவ படை, சிஆர்பிஎப் படை, மற்றும் போலீசார் ஆகியோர் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

10க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்த தேடுதல். பெட்ரோல் குண்டுகள், சீன பாகிஸ்தான் கொடிகள், லக்ஷர் இ தொய்பா மற்றும் ஜெய்சி அமைப்புக்களின் லெட்டர்பேட்கள், மொபைல் போன்கள், வெடி பொருட்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான வகையில் பலர் பதுங்கி இருப்பதும் இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.


வீடு வீடாக சென்று வீரர்கள் சோதனை நடத்தினார்கள். சோதனையை துவக்குவதற்கு முன் பாராமுல்லா நகரைச் சுற்றிய எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத செயல்பாடுகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த சோதனையில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு லக்ஷர் இ தொய்பா அமைப்பினர் விடுத்த மிரட்டலை அடுத்து இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பலர் லக்ஷர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.