மேற்கு வங்காளம், நாடியா மாவட்டத்தில் ஹதாரா பஜார் பகுதியில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிர் இழந்தனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடியா மாவட்டத்தில் ஹட்ரா பஜார் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில், வேகமாக சென்ற ட்ரக் ஒன்று அருகில் சென்ற காரின் மீது மோதியதில் நிலை தடுமாறிய கார மற்றும் ட்ரக் விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் 5 பேர் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர்.


தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர், காயங்களுடன் மீட்கப்பட்டவர்களை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


முதற்கட்ட விசாரணையில் விபத்துக்குள்ளன காரில் பயனித்து 8 பேரும், அருகில் உள்ள தொட்டி மாவட்டத்தின் சாப்ராவிற்கு பயணம் செய்துள்ளனர் என தெரிவயந்துள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.