டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி) வடகிழக்கு டெல்லியில் ஐந்து நிலையங்களை திங்கள்கிழமை மூடியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய தலைநகரில் குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் குறைந்தது 76 பேர் காயமடைந்தனர். நிலைமையைக் கருத்தில் கொண்டு, டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் பத்து இடங்களில் சிஆர்பிசியின் பிரிவு 144 விதிக்கப்பட்டுள்ளது. யாஃபிராபாத், மௌஜ்பூர்-பாபர்பூர், கோகுல்பூரி, ஜோஹ்ரி என்க்ளேவ் மற்றும் சிவ் விஹார் போன்ற மிக முக்கியமான பகுதிகளில் கடும் போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. சுமார் 20 காவல்துறையினர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


வடகிழக்கு டெல்லியில்  ஜாஃப்ராபாத் மற்றும் மௌஜ்பூரில் குடியுரிமை (திருத்த) சட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக  டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி) வடகிழக்கு டெல்லியில் ஐந்து மெட்ரோ ரயில் நிலையங்களை திங்கள்கிழமை மூடியது. 


"ஜாஃப்ராபாத், மௌஜ்பூர்-பாபர்பூர், கோகுல்பூரி, ஜோஹ்ரி என்க்ளேவ் மற்றும் சிவ் விஹார் ஆகியவற்றின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. வெல்கம் மெட்ரோ நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்படும் ”என்று டி.எம்.ஆர்.சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.


இந்த மோதலில் டெல்லி காவல்துறை தலைமை கான்ஸ்டபிள் கொல்லப்பட்டார் மற்றும் துணை போலீஸ் கமிஷனர் (டி.சி.பி) தரவரிசை அதிகாரி காயமடைந்தார்.