கொல்கத்தா: டார்ஜீலிங் மாவட்டத்தில் பாக்தோக்ரா விமான நிலையத்தில், பெண்களுக்காக சுகாதார பட்டைகள் (Sanitary Napkin) துப்புரவு இயந்திரங்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மாத இறுதியில் விமான நிலையத்தில் உள்ள பெண்கள் கழிப்பறைகளில் இந்த வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இயந்திரத்தின் மூலம் பெறப்படும் சுகாதாரப் பட்டைகள் ரூ.5 ஆக இருக்கும் என பாக்தோக்ரா விமான நிலைய இயக்குனர் ரகிஷ் ஆர் சேய் தெரிவித்துள்ளார்.


"டெர்மினல் கட்டிடத்திற்குள் சுகாதார பட்டைகள் கிடைப்பது பெண் பயணிகளுக்கு ஆறுதலளிப்பதோடு, ஆரோக்கியமான நடைமுறைகளை மேம்படுத்தும் என பாக்தோக்ரா விமான நிலைய இயக்குனர் ரகிஷ் ஆர் சேஹே தெரிவித்துள்ளார். 


2017-ஆம் ஆண்டில் இந்தூர் விமானநிலையத்தில் முதன்முறையாக இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது, பின்னர் பல்வேறு விமான நிலையங்களில் AII (Airports Authority of India) நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.


இந்த முயற்சியை பெண்கள் பயணிகள் பரவலாக பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது!