ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் எல்லைப் பகுதியில், தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று இரவு துவங்கிய துப்பாக்கிச்சண்டை இன்று காலை தீவிரம் அடைந்தது. தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்து அவர்களுடன் தொடர்ந்து பலமணி நேரமாக துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் கடந்த சில நாட்களாக முறியடிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இதுவரை 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர், இந்நிலையில் தற்போது மேலும் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இதுகுறித்து ஜம்மு காஷ்மிர் காவல்துறை தெரிவிக்கையில், பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பாராமுல்லா - கைசாக்குண்ட் பகுதிகளில் தொடர்வண்டி போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிகளில் இணைய சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் படையினை சேர்ந்வர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றனர். ராணுவத்தின் 9RR (Rashtriya Rifles) பிரிவு வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை கூட்டாக இணைந்து இந்த துப்பாக்கி சண்டையினை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது!