புதுடெல்லி: நவம்பர் 1 முதல் LPG சிலிண்டர் டெலிவரி மற்றும் முன்பதிவு செய்யும் முறை மாறிவிட்டன. புதிய டெலிவரி முறையில் முன்பதிவு செய்வதற்கான இந்தேனின் (Indane) எண்ணும் மாறிவிட்டது. இந்தேன், வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS வழியாக புதிய எண்ணை அனுப்பியுள்ளது. இதன் மூலம் நீங்கள் கேஸ் ரீஃபில் பதிவு செய்யலாம். Whatsapp மூலமாகவும் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். எல்பிஜி கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்ய உங்களுக்கு 5 வழிகள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

LPG சிலிண்டரை 5 வழிகளில் முன்பதிவு செய்யலாம்


1. Gas Agency அல்லது விநியோகஸ்தரிடம் பேசி சிலிண்டர் புக் செய்யலாம்.


2. மொபைல் எண்ணில் அழைத்து கெஸ் புக் செய்யலாம்


3.https://iocl.com/Products/Indanegas.aspx  என்ற வலைத்தளத்தில் சென்று ஆன்லைனில் கேஸ் முன்பதிவு செய்யலாம்.


4. நிறுவனத்தின் Whatsapp எண்ணிலும் முன்பதிவு செய்யலாம்


5. இந்தேனின் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் கேஸ் முன்பதிவு செய்யலாம்.


ALSO READ: LPG சமையல் எரிவாயு முன்பதிவு எண் மாற்றம்... புதிய எண் என்ன என்பதை கவனியுங்கள்..!


Whatsapp-ல் மூலம் Gas Booking


நீங்கள் இந்தேனின் வாடிக்கையாளராக இருந்தால், இப்போது 7718955555 என்ற புதிய எண்ணில் அழைத்து கேஸ் சிலிண்டரை (Gas Cylinder) முன்பதிவு செய்யலாம். Whatsapp-பிலும் முன்பதிவு செய்யலாம். வாட்ஸ்அப் மெசஞ்சரில் REFILL என டைப் செய்து 7588888824 என்ற எண்ணுக்கு அனுப்பவும். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மட்டுமே இந்த செய்தியை அனுப்ப வேண்டும்.


டெலிவரி அங்கீகார குறியீடு (Delivery Authentication Code) இருக்கும்


OTP செயல்முறை Delivery Authentication Code (DAC) என்று அழைக்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் முதலில் 100 ஸ்மார்ட் நகரங்களில் DAC-ஐத் தொடங்கும். சிலிண்டரை முன்பதிவு செய்த பிறகு, குறியீடு வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் வருகிறது. டெலிவரி செய்யும் நபருக்கு code காட்டப்பட்ட பின்னரே சிலிண்டர் வழங்கப்படுகிறது. இந்த குறியீடு குறிப்பிடப்படாத வரை, டெலிவரி முடிக்கப்படாது, நிலுவையிலேயே இருக்கும்.


மொபைல் எண்ணை 2 நிமிடங்களில் அப்டேட் செய்யலாம்


வாடிக்கையாளரின் மொபைல் எண் புதுப்பிக்கப்படாவிட்டால், டெலிவரி செய்யும் நபர் அதை ஒரு செயலி மூலம் நிகழ் நேரத்தில் அப்டேட் செய்து, குறியீட்டை (code) உருவாக்க முடியும். அதாவது, டெலிவரி நேரத்தில், அந்த செயலியின் உதவியுடன் டெலிவரி பாய் மூலம் உங்கள் மொபைல் எண்ணை புதுப்பிக்கலாம். செயலி மூலம் மொபைல் எண் நிகழ்நேர அடிப்படையில் புதுப்பிக்கப்படும். இதற்குப் பிறகு, அதே எண்ணிலிருந்து குறியீட்டை உருவாக்கவும் வசதி கிடைத்துவிடும்.


தவறான தகவல்கள் அளித்தால் உங்களுக்கு நஷ்டம்


தவறான தகவல்களை அளிப்பவர்களின் கேஸ் சிலிண்டர்களின் விநியோகம் நிறுத்தப்படலாம். 100 ஸ்மார்ட் நகரங்களுக்குப் பிறகு, இது மற்ற நகரங்களிலும் அமல்படுத்தப்படும். வணிக சிலிண்டர்களுக்கு இந்த அமைப்பு பொருந்தாது. 


ALSO READ: தயாராகுங்கள்.. இன்று முதல் மாறப்போகும் உங்கள் வாழ்க்கை தொடர்பான இந்த விஷயங்கள்..!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR