இந்தியன் ரயில்வேயில் 9,000-க்கும் மேற்பட்ட காலியிடங்களில் 50% பெண்கள்: பியூஷ் கோயல்
இந்தியன் ரயில்வேயில் பாதுகாப்புப் படையில் 50 சதவீத பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்!
இந்தியன் ரயில்வேயில் பாதுகாப்புப் படையில் 50 சதவீத பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்!
ரயில்வேயில் கான்ஸ்டபிள்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் பதவிகளுக்கு வரவிருக்கும் சுமார் 9,000 காலியிடங்களில் 50 சதவீதம் பெண்களுக்கானது என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை அறிவித்தார். இந்த தகவலைப் பகிர்ந்த கோயல், "ரயில்வேயில் கான்ஸ்டபிள்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பதவிகளுக்கு வரவிருக்கும் 9,000 க்கும் மேற்பட்ட காலியிடங்களில் 50% பெண்களுக்கு இருக்கும்" என்று ட்வீட் செய்துள்ளார்.
கோயல் மேலும் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; "ரயில்வே பாதுகாப்பு படையின் (RPF) பணி ரயில்வேயின் உள்கட்டமைப்பு, ரயில்கள், நிலையங்கள் போன்றவற்றை கவனித்துக்கொள்வதாகும். அரசு ரயில்வே போலீஸ் (GRP) சட்டம் ஒழுங்கை கவனிக்கும் மாநில அரசின் கீழ் வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் , பெண்களின் பாதுகாப்பு பிரச்சினையில் நாங்கள் வெற்றிகரமாக பணியாற்றினோம், மேலும் சிறு குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தவறாக வழிநடத்தப்படுவதையும் தடுத்தோம். " என அதில் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கான 10 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் ஆட்சேர்ப்பு விரைவில் தொடங்கும் என்பதைக் குறிக்கும் வகையில், 2021 ஆம் ஆண்டுக்குள் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் முடிவை இந்திய ரயில்வே 2019 ஜனவரியில் அறிவித்தது.
"கடந்த ஆண்டு நாங்கள் 1.51 லட்சத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொண்டோம், 1.31 லட்சம் பதவிகள் காலியாக இருந்தன. மேலும் வரும் இரண்டு ஆண்டுகளில் சுமார் 99,000 பதவிகள் காலியாக இருக்கும், ஏனெனில் 53,000 மற்றும் 46,000 ரயில்வே ஊழியர்கள் முறையே 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஓய்வு பெறுவார்கள்" என்று பியூஷ் கோயல் கூறினார்.