உத்தர பிரதேசத்தில் மதர்சா விடுதி ஒன்றில் பாலியல் துன்புறுத்தப்பட்ட 6 முதல் 19 வயது நிறைந்த 52 சிறுமிகளை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் அமைத்துள்ள யாசின்கஞ்ச் பகுதியில் ஜமியா கதீஜ்துல் குப்ரா லீலாப்னத் என்ற பெயரில் மதர்சா விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியில் 101 சிறுமிகள் வசித்து வருகின்றனர்.


இந்த சிறுமிகளுக்கு  மதர்சா விடுதியின் மேலாளரான முகமது தையப் ஜியா என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 


இது தொடர்பாக சையது முகமது ஜிலானி அஷ்ரப் என்பவரின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார்  அளிக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து மூத்த எஸ்.பி. தீபக் குமாரின் நடவடிக்கையின் பேரில் 52 சிறுமிகள் மதர்சா விடுதியில் இருந்து மீட்கப்பட்டனர். மற்ற சிறுமிகள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளதாக தெரிவித்தனர்.  


பின்னர் அந்த சிறுமிகள் மீட்கப்பட்டு லக்னோவில் உள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.  


இந்த மதர்சாவில் இருந்து மீட்கப்பட்ட சிறுமிகள் போலீசாரிடம் கூறும்பொழுது, மதர்சா மேலாளர் தங்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிறுமிக்கு மிரட்டல் விடப்பட்டு உள்ளதும்,தெரியவந்துள்ளது. 


இந்த சம்பவத்தில் சிறுமிகளை தவறாக பயன்படுத்தி வந்த மதர்சா மேலாளர் முகமது தையப் ஜியா என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.


மேலும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை காவல் துறையினர் நடந்து வருகிறது.