தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த இளைய மகனை(ராம்சரண்) கொன்ற 55 வயதான தாயை(ராஜ்னி) மும்பை வாசி நகர போலீசார் கைது செய்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையில் பாயந்தர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி அங்குள்ள குவாரியில் அடையாளம் தெரியாத சடலத்தை போலீசார் மீட்டனர். அந்த சடலத்தில் கையில் ராஜ்னி, ராம்சரண் என்று பச்சை குத்தப்பட்டிருந்தன. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


சில நாட்களுக்கு பிறகு போலீசாருக்கு ராம்சரண் பற்றி விவரம் கிடக்க, அவரது வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது ராம்சரணின் தாயார் தான் ராஜ்னி (வயது 55) என்பதும், ராஜ்னியின் இரண்டாவது கணவருக்கு பிறந்த மகன் ராம்சரண் என்பதும் தெரியவந்தது. மேலும் ராம்சரண் தாயாரிடம் ஏன் தன் மகன் காணவில்லை என்று போலீசாரிடம் புகார் அளிக்கவில்லை என போலீசார் கேட்டனர். அவர்களின் பதில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, விசாரணையை தீவிர படுத்தினர். 


இதனையடுத்து, ராம்சரணின் தயார் தன் மகனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவர் போலீசாரிடம் கூறியது, தன்னை ராம்சரண் சுமார் ஆறு மாதமாக
பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், இதனால் தன் முதல் கணவரின் மகன் சீதாராமிடம் ரூ 50,000 கொடுத்து, ராம்சரணை கொலை செய்துவிடுமாறு கூறியதாகவும், சீதாராம் தன் நண்பர்கள் ராகேஷ் யாதவ் (வயது 23), கேஷவ் மிஸ்த்ரி (வயது 21) ஆகியோர் உடன் ராம்சரணை பாயந்தர் பகுதியில் உள்ள குவாரி கூட்டிச்சென்று கொலை நீரில் வீசியதாக கூறினார்.


இச்சம்பவத்தை அடுத்து வாசி நகர போலீசார் ராஜ்னி, சீதாராம் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோரை கைது செய்து, வழக்கு பதிவு செய்துள்ளனர்.