மத்திய பல்கலைகழங்களில் 5997 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பல்கலைகழகங்களை நிர்வகிக்கும் யு.ஜி.சி'யின் தகவல் படி மத்திய பல்கலைகழங்களில் பேராசிரியர்கள் பணியிடங்கள் 2421, இணை பேராசிரியகள் பணியிடங்கள் 4807, உதவி பேராசிரியர்கள் 9878 என மொத்தம் 17106 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளது.


இதில் 5997 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் பேராசிரியர்கள் பணியிடங்கள் 1323, இணை பேராசிரியகள் பணியிடங்கள் 2217, உதவி பேராசிரியர்கள் 2457 பணியிடங்கள் காலியாக உள்ளது.


காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி வேகமாக நடைபெற்று வருவதாகவும் மத்திய அமைச்சகம் சார்பில் விளக்கம் அளித்துள்ளது.