ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெய்த கனமழையை அடுத்து, மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாகிவிட்டது. அதாவது தலைநகர் ஜெய்ப்பூரிலில் தான் டெங்கு காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த மருத்துவக் கண்காணிப்பு குழு அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சுகாதார இயக்குநரகம் மற்றும் எஸ்எம்எஸ் மருத்துவமனை டெங்கு தொடர்பாக புள்ளிவிவரங்கள் வெளியிட்டதில் பெரும் அதிர்ச்சி ஏற்ப்பட்டு உள்ளது. எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் 2019 ஜனவரி 1 முதல் அக்டோபர் 14 வரை 6 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்து உள்ளனர். ஆனால் அக்டோபர் 14 வரை டெங்குவால் எந்த இறப்பும் நிகழவில்லை என்று சுகாதார இயக்குநரகம் குறிப்பிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

​​சுகாதார இயக்குநரகம் அளித்த தகவலை வைத்து பார்க்கும் போது மாநில மருத்துவ அதிகாரிகள் டெங்கு காய்ச்சல் இறப்புகள் குறித்து அரசாங்கத்துக்கு தவறாக புள்ளிவிவரங்களை அளித்துள்ளது. உண்மை என்னவென்றால், நோய்களின் தரவு தொடர்பாக அரசு துறை நிறுவனங்களில் எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. அந்த துறைகள் அளிக்கும் புள்ளிவிவரங்கள் குழப்பமாக உள்ளது. ராஜஸ்தானில் சுகாதாரத்துறையின் அறிக்கை படி, இந்த ஆண்டு இதுவரை டெங்கு காய்ச்சல் காரணமாக ஒரு மரணம் கூட ஏற்படவில்லை. அதேவேளையில் எஸ்எம்எஸ் மருத்துவமனை நிர்வாகத்தின்படி, இந்த ஆண்டு அக்டோபர் வரை 6 பேர் இறந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. பருவகால நோய்களைத் தடுப்பதற்காக மருத்துவத்துறை கோடி ரூபாய் செலவிடுகிறது. ஆனால் சரியான புள்ளிவிரங்களை முடியாத சூழலில் ராஜஸ்தான் சுகாதாரத்துறை செயல்படுகிறது என்பது வேதனையான விசியமாக இருக்கிறது.


டெங்கு காய்ச்சல் குறித்து ராஜஸ்தான் சுகாதாரத்துறையின் குழப்பமான புள்ளிவிவரங்கள் குறித்த விளக்கம் அளித்த மருத்துவத்துறை, அக்டோபர் 14 ஆம் தேதி வரை அரசாங்கத்தின் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், மாநிலத்தில் மழை காரணமாக, பருவகால நோய்கள் பரவ ஆரம்பித்துள்ளது. பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.