சாம்பா: இமாச்சலப் பிரதேசத்தில் பாலம் உடைந்து விழுந்ததில் சுமார் 6 பேர் காயமடைந்தனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சாம்பா பகுதியையும் பஞ்சாப் மாநிலத்தின் பாதங்காட் பகுதியையும் இணைக்கும் பாலம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்!


காயமடைந்தவர்கள் அருகில் உள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு உடனடியாக சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டனர்.


மாவட்ட ஆட்சியர், சுதேஷ் குமார் மோஹ்தா மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விபத்திற்கான காரணத்தை கண்டறியும் ஆய்வினை மேற்கொண்டனர்.



இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் "சரியான கட்டுமான பெருட்களை கொண்டு பாலம் கட்டப்படவில்லை, அதுதான் விபத்திற்கான காரணம்" என தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் நடக்கும் நேரத்தில், ஒரு கார் மற்றும் ஒரு மினி டிரக்கில் பயனிகள் பாலத்தை கடக்க முயற்சித்துள்ளனர்!