பஞ்சாப் ஜலந்தரில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சனிக்கிழமை மாலை காணாமல் போன 6 வயது சிறுமி, பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் (Punjab's Jalandhar) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் ஜலந்தர்-ஹோஷியார்பூர் (Jalandhar-Hoshiarpur) சாலையில் அமைந்துள்ள ஹசாரா கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் இருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர். பலியான சிறுமியின் பெற்றோர், பீகாரைச் சேர்ந்தவர்கள் மற்றும் பஞ்சாபின் ஜலந்தரில் கூலி வேலை செய்து வருக்கின்றனர். அவர்கள் வேலையில் இருந்து திரும்பியபோது சிறுமி காணாமல் போனதால் போலீசில் புகார் அளித்தனர்.


ALSO READ | இந்த 5 வங்கிகளில் சேமிப்புக் கணக்கை திறக்கவும்; வட்டி விகிதம் 7 மடங்கு அதிகம்!


அவர்களது வீட்டின் அருகே தங்கி வேலைபார்த்து வரும், சிறுமியின் குடும்பத்தின் உறவினர் சந்தோஷ், பிஸ்கட் பெறுவதற்காக சிறுமியை சைக்கிளில் அழைத்துச் (kidnapping) சென்றதாகவும், பின்னர் சிறுமியை வீட்டிலேயே விட்டுவிட்டதாகவும் கூறினார். சிறுமியின் பெற்றோர் அருகிலுள்ள பகுதிகளில் அவரைத் தேடத் தொடங்கியபோது, சந்தோஷ் தலைமறைவாகிவிட்டார் (Santosh absconded) என்று போலீசார் தெரிவித்தனர்.


இதை தொடர்ந்து, சந்தோஷ் மீது குடும்பத்தினர் புகார் அளித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறுமியின் சடலம் அதே பகுதியில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். ஆரம்ப விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே தற்போது தலைமறைவாக உள்ள சந்தோஷை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR