69th R-DAY : ஆசியான் அமைப்பு தலைவர்கள் வருகை-பாதுகாப்பு வளையத்துக்குள் டில்லி
இன்று 69_வது இந்திய குடியரசு தினவிழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொள்ள ஆசியான் அமைப்பை தலைவர்கள் வருகை
இன்று 69_வது இந்திய குடியரசு தினவிழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொள்ள ஆசியான் அமைப்பை தலைவர்கள் வந்துள்ளனர்.
69_வது இந்திய குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குறிப்பாக தலைநகரம் டில்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மார்க்கெட் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளனர். எந்தவித அசம்பாவிதத்தையும் தடுக்கும் அளவில், பாதுகாப்பு வளையத்துக்குள் டில்லி கொண்டு வரப்பட்டுள்ளது
இந்த ஆண்டு முதல் முறையாக ஆசியான் அமைப்பை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, லாவோஸ், மியான்மர், கம்போடியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்கள், இந்த மாநாட்டில் பங்கேற்று உள்ளனர்.
இன்று முதல் முறையாக ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் கொடியேற்றுவார். இந்நிலையில் குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார். அப்பொழுது, நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட மற்றும் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்வதாக தெரிவித்தார். மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு தூணாக இருக்கும் இளைஞர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள் என உரையாற்றினார்.