7th Pay Commission latest news today: ஹோலி பண்டிகைக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படியை (DA) மத்திய அரசு அறிவிக்கக்கூடும். எனினும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று வந்துள்ள மிகப் பெரிய சமீபத்திய செய்தி ஒன்று உள்ளது. அகவிலைப்படி நிலுவைத் தொகைகளை, அதாவது அரியர் தொகைகளை ஒரே தவணையில் கொடுக்க அரசு முடிவு செய்யக்கூடும். DA திருப்பிக் கொடுக்கப்படும் போது, 18 மாதங்களுக்கான DA அரியர் தொகையை ஒரே நேரத்தில் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசு ஊழியர்களுக்கான கோரிக்கையை ஆணையம் எழுப்பியுள்ளதாக தேசிய கவுன்சில் ஜேசிஎம் (பணியாளர்கள் பிரிவு) செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் நிதி அமைச்சகம், செலவுத் துறை அதிகாரிகள், ஜே.சி.எம் (பணியாளர்கள் பிரிவு) ஆகிய தரப்புகளுக்கு இடையிலான சந்திப்பு ஒரே முறையில் நிலுவைத் தொகையை வழங்குவது பற்றி கலந்தாலோசித்தது என்று அவர் கூறினார். இதைப் பற்றி பரிசீலிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


60 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி


ஒரே நேரத்தில் 18 மாத அரியர் தொகையை வழங்க அரசாங்கம் ஒப்புக் கொண்டால், அது மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) ஒரு மிக நல்ல செய்தியாக இருக்கும். அத்துடன், 60 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும். அவர்களின் அகவிலை நிவாரணம் (DR) நேரடியாக டிஏ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் 18 மாத நிலுவைத் தொகை வழங்கப்பட்டால், ஓய்வூதியதாரர்களுக்கும் அதே அளவு DR நிவாரணம் கிடைக்கும்.


DA மற்றும் DR அரியர் தொகைப் பற்றி பேசிய தேசிய கவுன்சிலின் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா, "சமீபத்தில் நிதி அமைச்சககத்தின் செலவுத் துறை மற்றும் DoPT அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான முழு 18 மாத DA மற்றும் DR அரியர் தொகையையும் ஒரே நேரத்தில் வழங்க நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று கூறினார்.


ALSO READ: 7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% DA: DR-ல் வரக்கூடும் நன்மை என்ன?


சுமார் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 60 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் இது ஒரு மிகப் பெரிய நிவாரணத்தை அளிக்கக்கூடிய இந்த முடிவு குறித்து பரிசீலனை செய்வதாக மத்திய அரசு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்று மிஸ்ரா கூறினார்.


முன்னதாக, 2020 மார்ச்சில், நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த ஒரு எழுத்துப்பூர்வ பதிலில், அதிகரிக்கப்பட்ட DA மத்திய அரசு ஊழியர்களின் ஏப்ரல் மாத ஊதியத்திலும், ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களது மாதாந்திர ஓய்வூதியத்திலும் சேர்த்து தரப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கொரோனா தொற்று காரணமாக லாக்டௌன் ஏற்பட்டதால், ஜூன் 2021 வரை DA மற்றும் DR-ஐ நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது.


ஆகையால், ஜெ.சி.எம் தேசிய கவுன்சில், டிஓபிடி மற்றும் நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளை (செலவுத் துறை) சந்தித்தபோது, ​​DA மற்றும் DR-ருக்கான 18 மாத அரியர் தொகை மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது. மேலும், DA மற்றும் DR நிறுத்தப்பட்டதும் அகற்றப்பட்டு அவை மீண்டும் வழங்கப்பட வெண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.


ALSO READ: 7th Pay Commission: இந்த அரசு ஊழியர்களுக்கு good news, 75% அரியர் தொகை, 13% DA அளிக்க ஏற்பாடு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR