7-வது சம்பள கமிஷனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இன்று அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை மோடி அரசு அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

7 வது சம்பள கமிஷன் கீழ் 50 லட்சம் ஊழியர்களுக்கு ஊதியக் குழுவில் அகவிலைப் படி 2 சதவிகிதம் வரை உயர்த்தி கொடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இப்போது, 7 வது சம்பள கமிஷன் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் அகவிலைப் படி 7 சதவீதம் பெற்று வருகின்றனர். இனிமேல் அது 9 சதவிகிதமாக பெறுவார்கள். ஊழியர்களின் அடிப்படை ஊதியம் அடிப்படையில் அகவிலைப் படி கணக்கிட்டு கொடுக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.


இந்த சலுகை உயர்வானது அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும். இது இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் நாள் முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


இந்த சலுகை உயர்வால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 6112.20 கோடி ரூபாயும், ஒரு நிதி ஆண்டுக்கு 407.80 கோடி ரூபாயும் கூடுதல் செலவாகும். இது 20013-14 ஆம் ஆண்டை காட்டிலும் அரசுக்கு 1.10 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.