7th Pay Commission DA உயர்வுடன் TA, PF, கிராஜுவிட்டி, DR என அனைத்தும் உயரும்: நிபுணர்கள் உறுதி
DA முடக்கம் நீக்கப்பட்டவுடன், ஊழியர்களின் மாதாந்திர PF மற்றும் கிராஜுவிட்டி பங்களிப்புகளும் அதிவேகமாக உயரும். ஏனெனில், ஒருவரது PF மற்றும் கிராஜுவிட்டி ஆகியவை அவரது அடிப்படை சம்பளம் மற்றும் DA-வின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
7th Pay Commission latest news today: சுமார் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் சுமார் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) ஆகியவை ஜூலை 2021 க்குள் மீண்டும் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஜூன் 2021 வரை DA மற்றும் DR-ஐ மத்திய அரசு முடக்கி வைத்திருந்தது.
இந்த முடக்கத்தை மத்திய அரசு மேலும் நீட்டிக்காமல் இருந்தால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய அளவு அதிகரிப்பு ஏற்படும். தற்போதுள்ள 17 சதவிகிதத்திலிருந்து அவர்களின் DA 28 சதவிகிதமாக அதிகரிக்கப்படும். (இதில் ஜனவரி முதல் ஜூன் 2021 வரை எதிர்பார்க்கப்படும் 4 சதவீத DA உயர்வும் அடங்கும்). DA முடக்கம் நீக்கப்பட்டவுடன், ஊழியர்களின் மாதாந்திர PF மற்றும் கிராஜுவிட்டி பங்களிப்புகளும் அதிவேகமாக உயரும். ஏனெனில், ஒருவரது PF மற்றும் கிராஜுவிட்டி ஆகியவை அவரது அடிப்படை சம்பளம் மற்றும் DA-வின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
ஏழாவது ஊதியக்குழு: PF, கிராஜுவிட்டி கணக்கீடு
DA முடக்கம் நீக்கப்பட்ட பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர பி.எஃப் மற்றும் கிராஜுவிட்டி எவ்வாறு மாறும் என்பது குறித்து பேசிய டிரான்ஸென்ட் கன்சல்டன்ஸின் செல்வ மேலாண்மை நிர்வாக இயக்குனர் கார்த்திக் ஜாவேரி, "மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர வருங்கால வைப்பு நிதி (PF) பங்களிப்பு மற்றும் கிராஜுவிட்டி அவர்களது அடிப்படை சம்பளம் மற்றும் DA-வின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. DA அதிகரிக்கும் என்பதால், ஒருவரின் பிஎஃப் மற்றும் கிராஜுவிட்டி கணக்கீடு DA இன் உயர்வுக்கு ஏற்ப மேலே செல்லும்” என்று கூறினார். பி.எஃப் பங்களிப்பு விதிகள் ஒருவரது DA மற்றும் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் வரை அனுமதிக்கின்றன என்று ஜாவேரி கூறினார். எனவே, ஒரு மத்திய அரசு ஊழியரின் DA தற்போதுள்ள 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்ந்தால், அவரது பி.எஃப் மற்றும் கிராஜுவிட்டி பங்களிப்பும் அதே முறையில் உயரும்.
ALSO READ: 7th Pay Commission: இந்த வகைகளில் ஊழியர்களுக்கு நன்மை செய்தது மத்திய அரசு: விவரம் உள்ளே
ஏழாவது ஊதியக்குழு: பயணப்படி (TA)
DA உயர்வுக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படி (TA) எவ்வாறு மாற்றப்படும் என்பது குறித்து, செபி பதிவுசெய்த வரி மற்றும் முதலீட்டு நிபுணர் ஜிதேந்திர சோலங்கி கூறுகையில், மத்திய அரச ஊழியரின் TA, DA உயர்வுடன் ஒத்திசைவாக உயரும் என்று கூறினார். எனவே, DA உயர்வு ஒரு மத்திய அரசு ஊழியரின் TA உயர்வுக்கும் உதவி செய்யும்.
ஏழாவது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரண உயர்வு
ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் அதாவது DR, DA உயர்வுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளபடியால், DA முடக்கம் நீக்கப்ப்படும் போது, அது ஓய்வூதியதாரர்களுக்கும் நல்ல நம்மையை அளிக்கும்.
ஜூலை 2021 இல் எதிர்பார்க்கப்படும் DA உயர்வு ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியத்தை அதே முறையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: 7th Pay Commission: LTC cash voucher திட்டம் பற்றிய முக்கிய தகவலை வழங்கியது மத்திய அரசு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR