மேகாலயா மாநிலத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எம்.ஏ.க்கள் 5 பேர் உள்பட 8 எம்.எல்.ஏ.க்கள், இன்று ஒரே நாளில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் முகுல் சங்மா தலைமையிலான அரசின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு, வரும் மார்ச் 6-ம் தேதி அம்மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 


இந்நிலையில், முன்னாள் துணை முதலமைச்சர் ரோவல் லிங்டா உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஐந்து பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களுடன் ஐக்கிய ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏ ஒருவர். சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் இருவரும் தங்கள் பதவியினை ராஜினாமா செய்துள்ளனர். 


முதலமைச்சரின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து வந்த இவர்கள், இன்று சபாநாயகர் அலுவலகத்தில் தங்கள் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளனர். 



மேலும் இவர்கள் 8 பேரும் ஷில்லாங்கில் அடுத்த வாரம் பிரம்மாண்டமான ஊர்வலம் நடத்தி, தேசிய மக்கள் கட்சியில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளனர்