டெல்லி: துணிக்கிடங்கில் பயங்கர தீ விபத்து - 9 பேர் பலி!
டெல்லியில் உள்ள துணிக்கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
டெல்லியில் உள்ள துணிக்கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
டெல்லியின் கிராரி என்ற இடத்தில் துணிக்கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த துணிக்கிடங்கில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர தீ விபத்தில், 9 பேர் பலியாகினர் மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை.