மகாராஷ்டிராவின் மும்பையின் கஸ்தூர்பா மருத்துவமனையில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்ட 64 வயது நோயாளி காலமானார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவில் 36 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளில் இறந்தவரும் ஒருவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாடுமுழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இதுவரை இந்தியாவில் மூன்று உயிர்களை பலி வாங்கியுள்ளது. முன்னதாக கர்நாடகா மற்றும் டெல்லி என இருவர் கொரோனா வைரஸ் பாதிப்பில் தங்களது உயிரை இழந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் 64-வயது நோயாளி ஒருவர் காலமாகியுள்ளார். இது மகாராஷ்டிராவின் முதல் கொரோனா வைரஸ் மரணம் ஆகும்.



பிரஹன் மும்பை மாநகராட்சி மரணம் குறித்து முறையான அறிக்கை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக, கடந்த செவ்வாயன்று கர்நாடகாவின் கல்புர்கியைச் சேர்ந்த 76 வயது நபர் ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்தார். இந்த இறப்பு இந்தியாவின் முதல் இறப்பாக உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் அவர் கொரோனா நேர்மறை சோதனை முடிவு பெற்றார் என அவர் இறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டது.


அடுத்த நாள் நாவல் கொரோனா வைரஸுக்கு பலியான டெல்லியை சேர்ந்த பெண்மணி, நாட்டின் இரண்டாவது கொரோனா இறப்பை பதிவு செய்தார். டெல்லி ஜனக்புரியைச் சேர்ந்த 68 வயதான பெண் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.