பரோட்டாவால் பரிதாபமாக பறிப்போன உயிர்!
பரோட்டோ சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி உயிரிழக்கும் சோகம் தொடர்வது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
பரோட்டோ சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி உயிரிழக்கும் சோகம் தொடர்வது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
மீனவர் என்பதால் எத்தனையோ முள் வகையான மீன்களை சாப்பிட்டிருப்பார். அப்படிப்பட்ட மீனவர் புரோட்டா சாப்பிட்டபோது, புரோட்டா தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த பரிதாபம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டம் ஓச்சிரா அருகே உள்ள தெற்கு கிளப்பினா வரவில் வசித்து வந்தவர் ஹரிஷ்(45). இவருக்கு ஸ்ரீலதா என்ற மனைவியும், ஹரிதா என்ற மகளும், ஹரிஜித் என்ற மகனும் உள்ளனர்.
மீனவரான ஹரீஸ் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு 9 மணிக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அருகே இருக்கும் உணவகத்தில் இருந்து பரோட்டா வாங்கி வந்து சாப்பிட்டு இருக்கிறார். ஒரு பரோட்டாவை எடுத்து சாப்பிட தொடங்கியதுமே, அவருக்கு திடீரென மூச்சு அடைத்தது போல இருந்திருக்கிறது. சட்டென்று பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி விழுந்திருக்கிறார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை உடனே மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து உள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் . இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாரிப்பள்ளி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் உறவினர்களிடம் விசாரணை நடத்தியபோது, பரோட்டா சாப்பிடும்போது மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார் என்று சொல்லவும், புரோட்டா தொண்டையில் சிக்கி அதன்மூலம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசாருக்கு தெரியவந்திருக்கிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று ஹரீஸ் உடல் தகனம் செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம் திருவண்ணாமலை மாவட்டம் பவித்ரம் கிராமத்தை சேர்ந்த தாமோதரன்(45) சொந்த வேலை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் சென்றபோது, பேருந்து நிற்கும் இடத்தில் அமர்ந்து புரோட்டா சாப்பிட்டபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த 2019-ம் ஆண்டு இதே போல் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் கருவடிகுப்பம் பாரதி நகரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்ற இளைஞர் திருமணம் நடந்து ஆறு மாதத்தில் மனைவியை தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு, இரவில் கடையில் புரோட்டா வாங்கி வந்து சாப்பிட்டுக்கொண்டே மனைவியிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது புரோட்டா தொண்டையில் சிக்கி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறார்.கணவரிடம் இருந்து திடீரென்று பேச்சு கட்டானதால் அதிர்ச்சி அடைந்து, உறவினர்களிடம் சொல்லி போய் பார்க்கச் சொல்லியிருக்கிறார். மயங்கி கிடந்த புருஷோத்தமனை மருத்துவமனையில் கொண்டு சேர்த்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள். பிரேத பரிசோதனையில் புருஷோத்தமனின் தொண்டையில் பரோட்டா சிக்கி இருந்தது தெரியவந்திருக்கிறது. புரோட்டா தொண்டையில் சிக்கி உயிரிழப்பு நேரும் சோகம் தொடர்வது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ALSO READ அடுத்த 3 மாதங்களுக்கு கவனம் தேவை: எச்சரிக்கும் சுகாதாரச் செயலர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR