தன்னை கற்பழிக்க வந்த ஆணிடம் தனக்கு HIV இருப்பதாக கூறி அவரிடமிருந்து தப்பிய பெண்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் அருகே வாலுஜ் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளம் பெண் விதவை ஆவார். இவர் தனது பெண் குழந்தையுடன் கடந்த மாதம் 25 ஆம் தேதி, அருகில் உள்ள நகரத்தின் கடைவீதிகளுக்குச் சென்றுள்ளார். இதையடுத்து, அவர் வீடு திரும்பும் போது அவரது கையில் வெறும் 10 ரூபாய் மட்டுமே இருந்ததால் ஷேர் ஆட்டோவில் ஏறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், வாகனத்தில் வரும் யாரிடமாவது உதவி கேட்கலாம் என்ற குழந்தையுடன் காத்திருந்துள்ளார்.


அப்போது 22 வயது இளைஞர் ஒருவர் பைக்கில் வந்தார். அப்போது அந்த பெண் அவரிடம் லிப்ட் கேட்டு தனது குழந்தையுடன் அந்த இளைஞரின் பைக்கில் ஏறிச் சென்றார். அப்போது, திடீரென பாதையை மாற்றி பைக்கை ஓட்டிய அந்த இளைஞர், மறைவான ஒரு பகுதியில் அந்த பெண்ணை இறக்கி விட்டு, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.


இந்த இக்கட்டான சமயத்தில் சமயோகிதமாக யோசித்த அந்தப் பெண், தனக்கு HIV பாதிப்பு இருப்பதாகத் தெரிவித்தார். இதனால், அச்சமடைந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச்சென்றார். பின்னர் அந்த பெண் இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் தெரிவித்த அடையாளங்களை வைத்து கிஷோர் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.