எப்.டி.ஐ ஒப்புதலை பெற மத்திய அமைச்சரவை கூடுகிறது
எப்.டி.ஐ குறித்து பல முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக பல்வேறு எதிர்ப்புக்களுக்கு இடையே மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது. எப்.டி.ஐ எனப்படும் நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது.
எப்.டி.ஐ.,யை மேலும் பாதுகாப்பானதாக ஆக்குவதற்கு முதலீட்டாளர்களுக்கு நிரந்தர வசிப்பிடம் இருக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டது. இந்நிலையில் அமைச்சரவையின் ஒப்புதலை பெறுவதற்காக இன்று அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.