உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டியதாகும். தாஜ்மஹாலில் உள்ள 22 ரகசிய அறைகளைத் திறக்க வேண்டும் எனவும், தாஜ்மஹாலை வரலாற்று நினைவுச்சின்னமாக அறிவித்ததை எதிர்த்தும், ரஜ்னீஷ் சிங் என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாஜ்மஹாலை ஷாஜகான் தான் கட்டினார் என்பதற்கான ஆதாரங்களைக் கேட்டு தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, அப்படி எவ்விதமான ஆதாரங்களும் இல்லை என NCERT பதிலளித்ததாக  ரஜ்னீஷ் சிங் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், இது குறித்து இந்திய தொல்லியல் துறையும் திருப்திகரமான பதில்களை அளிக்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் நீதித்துறை கருத்து தெரிவிக்க முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.


மேலும் படிக்க | தாஜ்மஹாலின் 22 அறைகள் குறித்த சர்ச்சைக்கு மத்தியில் ASI வெளியிட்டுள்ள படங்கள்


இந்நிலையில்,  தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை ஆய்வு செய்ய உண்மைக் கண்டறியும் குழுவை அமைக்க வேண்டுமென ரஜ்னீஷ் சிங் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். 1631-ம் ஆண்டு முதல் 1653-ம் ஆண்டு வரையிலான பேரரசர் ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜுக்காக தாஜ்மஹாலைக் கட்டினார் என்பதை நிரூபிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.


தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள சர்ச்சைக்கு முடிவு கொண்டு வரவும், அதன் வரலாற்றை தெளிவுபடுத்தவும் வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மசூதிகளின் அமைவிடம் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், தற்போது தாஜ்மஹால் குறித்து எழுந்துள்ள இந்த சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | தாஜ் மகாலுக்குள் இந்து சிலைகள்? கண்டுப்பிடிக்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ