ஆதார் கட்டாயம் என்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நடைப்பெற்ற தொடர் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பின் தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதையா காலகட்டத்தில் அராசாங்கத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, புதிய வங்கி கணக்குகளை திறப்பது வரை ஆதார் எண் அவசியமாகி விட்டது.


அரசு சேவைகளுக்கும் சமூக நலன் சார்ந்த திட்டங்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வங்கி கணக்குகள், பான் கார்டு, ஓய்வூதியம், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுநர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் எரிவாயு மானியம், பரஸ்பர நிதி முதலீடுகள் போன்றவற்றை பெற ஆதார் அடையாள எண் வழங்குவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் ஆதாரை கட்டாயமாக்கும் சட்டம் மற்றும் பயோமெட்ரிக் முறை ஆகியவை அரசியல் சாசனத்தின் படி செல்லுப்படி ஆகாது என்று அறிவிக்கக்கோரி பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட தேக்கத்தில் உள்ளன.


இந்த வழக்கினை குறித்த விசாரணை கடந்த 38 நாள்களாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நடைப்பெற்ற பின்னர், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 


முன்னதாக, ஆதார் தகவல்கள் சரிபார்ப்பின் போது ஏற்படும் பிழை, உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்க வேண்டியவருக்கு அது கிடைக்காமல் செய்துவிட வாய்ப்பு உள்ளது என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.