ஆம் ஆத்மி எம்எல்ஏ -க்கள் 20 பேர் பதவி நீக்கத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் திரும்பப் பெற்றனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, கடந்த ஆண்டு மார்ச் 13-ம் தேதி, 21 ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை சட்டப்பேரவை செயலாளர்களாக நியமித்தனர்.


"ஆதாயம் தரும் 2 பதவிகளில் எம்எல்ஏ-க்கள் இருப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல் என்றும், அதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குடியரசு தலைவரிடம் புகார் அளித்தனர்.


இந்த புகார் கடிதமானது குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து எம்எல்ஏ -க்களிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.


21 எம்எல்ஏக்களில் ஒருவர் தனது பதவியை ராஜினமா செய்தார், எனவே 20 எம்எல்ஏ-க்கள் மீதான விசாரணை தொடர்ந்தது. பின்னர் இந்த 20 எம்.எல்.ஏ களையும் தகுதி நீக்கம் செய்யலாம் என குடியரசு தலைவருக்கு தேர்தல் ஆனையம் பரிந்துரைத்தது.


இதையடுத்து, இந்த 20 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்வதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.


இந்நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏ மனுக்களினால் பலன் இல்லை என்பதால் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 



அதே சமயத்தில் ஜனாதிபதியின் உத்தரவை முழுமையாக பரிசீலித்து பின்னர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.