அபுதாபி இளவரசருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது
68-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக்முகமது பின் சையது அலி டெல்லி வந்துள்ளார். அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
புதுடெல்லி: 68-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக்முகமது பின் சையது அலி டெல்லி வந்துள்ளார். அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி நாளை பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதையொட்டி, மூன்று நாள் அரசுமுறை பயணமாக அவர் நேற்று புதுடெல்லி வந்தடைந்தார். இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.
டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை அபுதாபி இளவரசருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் டெல்லி ராஜ்கட் பகுதியில் அமைந்துள்ள காந்தி நினைவிடத்துக்கு சென்று மலரஞ்சலி செலுத்தி, மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்துக்கு சென்ற அவர் அங்கு இந்தியா-அபுதாபி இடையிலான வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.