ஆசிட் வீசுவோருக்கு எவ்விதத்திலும் கருணை காட்டக் கூடாது: சுப்ரீம் கோர்ட்
ஆசிட் வீசிய குற்றவாளிகளுக்கு எந்த விதத்திலும் கருணை காட்ட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
ஆசிட் வீசிய குற்றவாளிகளுக்கு எந்த விதத்திலும் கருணை காட்ட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு இமாசலப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் மீது இரண்டு பேர் ஆசிட் வீசினர். இந்த தாக்குதலில் அந்த இளம்பெண் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் விசாரணை நீதிமன்றம், குற்றவாளிகள் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
இந்த தண்டனையை குறைக்க கோரி குற்றவாளிகள் அம்மாநில ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவர்களது தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து, அபராத தொகையை தலா ரூ. 25 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டனர். இந்த தண்டனைக்கு தடைவிதிக்க கோரி மாநில அரசு சார்பில் கடந்த 2008ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இமாசலப்பிரதேசம் மாநில அரசு தொடுத்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி கன்வில்கர் மற்றும் நீதிபதி அஜய் ரஸ்டோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதில், ஆசிட் வீசிய குற்றவாளிகளுக்கு எந்த விதத்திலும் கருணை காட்ட முடியாது. மேலும் குற்றவாளிகள் கருணை அடிப்படையில் தண்டனை குறைப்பு கோர தகுதியற்றவர்கள் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.