நாடு முழுவதும் ரமலான் பண்டிகை இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்
இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் கடைபிடித்து வரும் ஐம்பெரும் கடமைகளின் ஒன்றான, ரமலான் நோன்பு கடந்த ஜூன் மாதம் 7--ம் தேதி தொடங்கியது. ரமலான் நோன்பு முடிந்ததன் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ஈத் பித்ர் எனப்படும் ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஈகைத் திருநாளான ரமலான் பண்டிகை தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பள்ளிவாசல்களில் அதிகாலையில் இருந்தே தொழுகைகள் நடைபெறுகின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
இதேபோல் நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களால் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.