நல்கொண்டாவில் கார் விபத்தில் படுகாயமடைந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஹரிகிருஷ்ணா, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகரும், தெலுங்கு தேசம் TDP கட்சியை சேர்ந்தவருமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் காயமடைந்தார். இவர் நர்கேட்பள்ளி - அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணா அருகில் உள்ள சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


இதையடுத்து, அங்கு சிகிச்சை பலனின்றி ஹரி கிருஷ்ணா மருத்துவமனையில் உயிரிழந்தார். முன்னாள் TDP கட்சி தலைவரான இவர் ஆந்திர முன்னாள் முதல்வர் என்டிஆர்-ன் மகன் ஆவார். நடிகர் ஜூனியர் என்டிஆரின் தந்தையும் இவர்.