Kerala | நடிகை ஹனி ரோஸ் பாலியல் துன்புறுத்தல் புகார்.. கேரள தொழிலதிபர் செம்மனூர் கைது!
Honey Rose Latest News: பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ் பாலியல் துன்புறுத்தல் புகாரை அடுத்து நகைக்கடை அதிபர் கைது செய்யப்பட்டு விசாரணை.
Kerala Boby Chemmanur Latest News: மலையாள நடிகை ஹனி ரோஸ் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததையடுத்து, கேரளாவின் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் சிறப்பு புலனாய்வுக் குழுவால் (SIT) கைது செய்யப்பட்டு, காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் வயநாட்டில் இருந்து போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல்துறையின் நடவடிக்கை குறித்து பதிலளித்த நடிகை ஹனி ரோஸ், "இது தனக்கு அமைதியான நாள் என்றும், முதல்வர் பினராயி விஜயனிடம் இந்த விவகாரம் குறித்து சொன்ன போது, குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும்" செய்தி சேனலுக்கு பெட்டி அளித்ததுள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் தனது சமூக ஊடக பக்கத்தில், "தான் துன்புறுத்தப்படுவதாகக் கூறினார். அதாவது தன்னைக் குறித்து வேண்டுமென்றே ஒரு நபர் இரட்டை அர்த்த வார்த்தைகள் மூலம் அவமானப்படுத்தி வருவதாகவும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். ஆனால் அந்த நபரின் பெயரை குறிப்பிடவில்லை.
நடிகை ஹனி ரோஸின் பதிவை அடுத்து, "இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்திய அந்த ஆபாச நபருக்கு நீங்கள் எந்த பதிலடியும் கொடுக்கவில்லை.. அதை நீங்கள் ரசிக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டதோடு, பலர் தகாத வார்த்தைகளால் மோசமான கமெண்ட்களை பதிவு செய்திருந்தனர்.
அதற்கு பதிலடி தரும் வகையில், இதுபோன்ற தனிப்பட்ட முறையில் என்னை அவமதிப்பு செய்யம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் மோசமான கருத்துக்களை புறக்கணிக்க முனைகிறேன். ஆனால் நான் அவர்களுக்கு பதிலளிக்க இயலாது என்று அர்த்தமல்ல.. சட்டரீதியான விளைவுகளை அவர்கள் சந்திப்பார்கள் என எச்சரிக்கை" செய்தார்
இதையடுத்து, ஆபாச கமெண்ட்களை பதிவிட்டவர்களுக்கு எதிராக எர்ணாகுளம் காவல் நிலையத்தில் நடிகை ஹனி ரோஸ் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறை, 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அந்த வரிசையில் சமீபத்தில் தொழிலதிபர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக நடிகை ஹனிரோஸ் கேரளா எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கொச்சி சென்ட்ரல் ஸ்டேஷன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு, இன்று தொழிலதிபர் பாபி செம்மனூரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
செம்மனூர் குழுமத்தின் தலைவர், நகை வியாபாரம் செய்யும் ஒரு பெரிய வணிகக் குழுமம். 2012 ஆம் ஆண்டு கால்பந்தாட்ட ஜாம்பவான் டியாகோ மரடோனாவை கேரளாவிற்கு அழைத்து வருவதில் முக்கிய பங்கு வகித்தார். அவர் மீதான போலீஸ் புகாரைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுகளை விசாரிக்க எஸ்ஐடி அவரை இன்று (புதன்கிழமை) கைது செய்தது.
மேலும் படிக்க - பிரபல நடிகர் மர்ம மரணம்! ஹோட்டல் அறையில் கிடந்த பிணம்-நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ