அதானி குழுமம் தொடர்பான சர்ச்சையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரணை செய்தது. அப்போது, ​​பங்குச் சந்தையில் இந்திய முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதானி குழுமத்தின் மோசமான நிலை குறித்து ஹிண்டன்பர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் மீது இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலீட்டாளர்களைப் பாதுகாக்க எதிர்காலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியிடம் இருந்து உச்ச நீதிமன்றம் பரிந்துரைகளைக் கோரியுள்ளது. இந்த வழக்கை திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. அடுத்த விசாரணையில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.


இந்திய முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாப்பது மட்டுமே எங்களின் கவலை


தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கொண்ட விசாரணையில், ஏற்ற தாழ்வுகள் நிறைந்த பங்குச் சந்தையில், இந்திய முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாப்பதே எங்களின் ஒரே கவலை. வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா மற்றும் விஷால் திவாரி ஆகியோரின் பொதுநல மனுக்களை விசாரித்த பெஞ்ச், செபி சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் பரிந்துரைகளை கோரியது. சமீப காலமாக பங்குச் சந்தையில் காணப்படும் திடீர் ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படும் இந்திய முதலீட்டாளர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று அவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்றார்.


மேலும் படிக்க | "அதிமுக எந்த கட்சியை நம்பியும் இல்லை" எடப்பாடி பழனிசாமியின் பஞ்ச்..!


முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்க ஒரு வலுவான செயல்முறையை பரிந்துரைக்கக்கூடிய நிபுணர்கள் குழுவை அமைக்கவும் பெஞ்ச் பரிந்துரைத்தது. எவ்வாறாயினும், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.


ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிக்க கோரிக்கை 


பொது நல வழக்குகளில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர் ஆண்டர்சன் மற்றும் அவரது இந்திய கூட்டாளிகளுக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவிடவும், தேவைப்பட்டால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் செபி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சர்மா கோரியுள்ளார். இரண்டாவது மனுவில், ஹிண்டன்பர்க் அறிக்கையை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும் என்று திவாரி கோரியுள்ளார்.


ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டவை


அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான அறிக்கையை ஜனவரி 24 அன்று வெளியிட்டது. இதில், அதானி குழுமத்தின் மீது பணமோசடி முதல் பங்குகளின் விலையை அசல் விலையை விட பல மடங்கு உயர்த்தியது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக அதானி குழுமத்தின் பங்குகளின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டது. மேலும் அதானி குழுமம் அதன் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான FPO ஐ திரும்பப் பெற வேண்டியதாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஈரோடு: ஓட்டுக்கு திமுக பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் - எடப்பாடி பழனிசாமி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ