அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை விரும்பாத காங்கிரஸ்: UP CM
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு....
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு....
சத்தீஷ்கர் மாநிலத்தில் சட்டசபைக்கு நவம்பர் 12 (நாளை) முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கும் இலையில் நேற்றுடன் பிரசாரம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், நேற்று சத்தீஷ்கரில் பிரட்சாரத்தில் ஈடுபட்டிருந்த உத்திரப்பிரதேச முதலவர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், பிரட்சாரத்தில் அவர் பேசியபோது; கவலை கொள்வது ராமருக்காகவா அல்லது முகலாய மன்னர் பாபருக்காகவா என விளக்கம் அளிக்க வேண்டும். கடந்த முறை சத்தீஸ்கர் வந்த போது அயோத்தியில் நிச்சயமாக ராமர் கோயில் கட்டப்படும் கூறினேன். காங்கிரஸின் கொள்கைகளை எதிர்ப்பதுடன் அக்கட்சிக்கு வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
காங்கிரஸ் தனது அரசியல் ஆதாயத்திற்காக சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் ரகசியமாக மாவோயிசத்தை ஊக்குவித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் காஷ்மீரிலும் பயங்கரவாதத்துடன் இணைக்கம் காட்டுகிறது. ஏழை மக்களின் நலன் குறித்து காங்கிரஸ் கட்சிக்கு தொலை நோக்கு இல்லை. கடந்த 15 ஆண்டுகளில் சத்தீஸ்கரில் பாஜக அரசு சமூகத்தின் அனைத்து துறைகளின் மீதும் அக்கறை எடுத்து செயலாற்றி வருகிறது என மக்களிடம் பேசினார்.
இந்நிலையில், சத்தீஸ்கர் சட்டமன்றத்திற்கு நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி நக்சலைட் ஆதிக்கம் மிக்க பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!