தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வகையில் அது கிரிமினல் குற்றம் இல்லை என உச்சநீதி மன்றம் தீர்ப்பு..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் காதல்வய படுகிறார்களோ இல்லையோ. திருமணமான ஆணும் திருமணம் ஆனா பெண்ணும் கள்ளக்காதலில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கள்ள தொட்ரபுக்காக தங்களின் பெற்ற குழந்தைகளையே தங்களின் கைகளால் கொலை செய்து வருகின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்து வருகின்றது. 


இந்நிலையில், திருமணமான பெண்ணும் திருமணமான வேறு ஒரு ஆணும் தகாத பாலியல் உறவு வைத்திருந்தால் அதில் ஆணை மட்டும் தண்டிக்க சட்டப்பிரிவு 497 செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்தச் சட்டத்தில் பாலின பாகுபாடு காட்டப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.


விசாரணையின் போது இந்த சட்டப்பிரிவு பெண்களுக்கு ஆதரவான நிலைப்பாடை கொண்டிருப்பது போல் தோற்றமளித்தாலும், ஆணாதிக்க நிலைக்கே வழி வகுப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. 


இந்த வழக்கிற்கு தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கூறுகையில், பெண்ணின் எஜமானர் கணவன் அல்ல; ஆணுக்கு சமமாக பெண்ணையும் நடத்த வேண்டும். பெண்ணுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும். தகாத உறவு விவகாரத்தில் ஆணுடன் பெண்ணுக்கும் தண்டனை வழங்கக்கோரும் வழக்கில் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். 


மேலும், தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வகையில் அது கிரிமினல் குற்றம் இல்லை. தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் 
சட்டப்பிரிவு அரசியல்சாசனத்திற்கு விரோதமானது என தெரிவித்துள்ளனர்.