மேற்கு வங்காளத்தில் உள்ள தாகூர்நகரில் தேர்தல் பிரசாரத்திற்கான பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொரோனா தடுப்பூசி போடும் பனி முடிந்தவுடன், சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர்க்கட்சிகள் சிஏஏ சட்டம் தொடர்பாக சிறுபான்மையினரை, குழப்பி தவறாக வழிநடத்துகின்றனர் என குற்றம் சாட்டிய அவர், இந்த சட்டத்தால் இந்திய சிறுபான்மையினரின் குடியுரிமை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என அவர் கூறினார். 


நாடாளுமன்றத்தில் திருத்தியமைக்கப்பட்ட குடியுரிமை சட்டத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான்,  ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தலால் தப்பி வந்த ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், , பார்ஸிகள், சமணர்கள், பெளத்தர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை பெறுவார்கள்.


குடியுரிமை திருத்த சட்டம் (CAA) தொடர்பாக BJP தேர்தலில் வாக்குறுதி அளித்தது என்றும், பாஜக எப்போதும் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது என்றும் அமித் ஷா தெரிவித்தார். 
2018-ல் புதிய குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவருவதாக மோடி அரசு உறுதியளித்தது. 2019 ல் பாஜக தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது என திரு,அமித்ஷா குறிப்பிட்டார். 


சட்டம் இயற்றப்பட்ட பிறகு கடந்த ஆண்டு  கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கொரோனா தடுப்பூசி போடும் பணி  முடிந்தவுடன், சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் என்றார். 


ALSO READ | இந்தியா ஒரு அங்குல நிலத்தை கூட இழக்கவில்லை, இழக்காது: ராஜ்நாத் சிங்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR