இந்தியாவின் பிரதிநிதியாக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பிரதமர் மரியாதைக்குரியவர் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோடி தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவின் பிரதிநிதியாக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது பிரதமர் மரியாதைக்கு உரியவர். அவரை விமர்சிக்கக் கூடாது. அவர் நாட்டில் இருக்கும்போது, அவரை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உண்டு என சசி தரூர் தெரிவித்துள்ளார். 
 
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் அகில இந்திய நிபுணத்துவ காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த அமர்வில் பேசிய  அவர்; பிரதமர் மோடி இந்தியாவில் இருக்கும் போது, அவரிடம் கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உள்ளது. ஆனால், இந்தியாவின் பிரதிநிதியாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது பிரதமர் மோடி மதிக்கப்பட வேண்டும். இந்தி ஒரு பொதுவான மொழியாக இருக்க வேண்டும் என்ற தனது கருத்து குறித்து கடும் விவாதத்திற்கு மத்தியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை, நாட்டில் சொந்த மொழிகள் மீது இந்தி விதிக்குமாறு ஒருபோதும் கேட்கவில்லை, ஆனால் அதை இரண்டாவது மொழியாகப் பயன்படுத்துமாறு வாதிட்டார். இது நம் நாட்டிற்கு ஆபத்தானது. மும்மொழி கொள்கையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.



கும்பல் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து ஆளும் பாஜகவை அவர் விமர்சித்தார், அவை "இந்து மதத்திற்கும் ராமருக்கும் அவமானம்" என்று கூறினார். மகாராஷ்டிராவில் பா.ஜ.க கும்பலால் கொலைகள் நடக்கின்றன. கேரளாவில் வெவ்வேறு சமூகத்தினர் இருந்தாலும் வேறுபாடுகளின்றி மக்கள் வாழ்கின்றனர். ஆனால், மகாராஷ்டிராவில் மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது. சத்ரபதி சிவாஜி கூட தனது ஆட்சியில் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களை கொண்டிருந்தார். ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.