கேரள காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு; PC Chacko கட்சியிலிருந்து விலகினார்
கேரளாவில் முக்கிய காங்கிரஸ் தலைவரான பிசி சாக்கோ கட்சியில் இருந்து விலகினார். தான் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி அவர் காங்கிரஸை விட்டு விலகினார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு சற்று முன்னதாக கேரளாவில் புதன்கிழமை காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது, மூத்த தலைவர் பி.சி.சாக்கோ கட்சியை ராஜினாமா செய்தார். தான் புறக்கணிக்கப்படுவதாக என்று குற்றம் சாட்டி சாக்கோ காங்கிரஸை விட்டு விலகினார். கட்சியில் ஜனநாயகம் என்பதே இல்லை எனவும் அவர் கூறினார்.
சாக்கோ தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
"கேரளாவில் காங்கிரஸ் (Congress) கட்சியே இல்லை. மாநிலத்தில் கட்சி இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ளது" என்று சாக்கோ செய்தியாளர்களிடம் கூறினார்.
எதிர்வரும் தேர்தல்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் தொடர்பாக கட்சியின் இரு பிரிவுகளிடையே போட்டி நடைபெறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கேரள சட்டசபையின் அனைத்து 140 இடங்களுக்கும் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது, மேலும் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும்.
ALSO READ | அதிமுகவின் இலவச அறிவிப்பு: வருடத்திற்கு 6 சிலிண்டர், குடும்பத்தலைவிக்கு மாதம் ₹1500
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR