இந்தியாவிலேயே முதல் முறையாக ஆமதாபாத்தை உலகப் பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டியின் 41-வது கூட்டம் நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஆமதாபாத் நகரை உலக பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.


ஆமதாபாத்தை உலக பாரம்பரிய நகரமாக தேர்வு செய்யும் பரிந்துரைக்கு துருக்கி, போர்சுக்கல், தென் கொரியா, ஜிம்பாப்வே, க்யூபா உள்ளிட்ட 20 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன. 


இந்த பட்டியலில் இடம் பெறுவதற்கான போட்டியில் டெல்லி மும்பையும் பங்கேற்றது. ஆனால் ஆமதாபாத் பெருமையை தட்டிக் சென்றுவிட்டது.


600 ஆண்டுகளுக்கு முன்பு ஆமதாபாத்தில் மன்னர் அகமது ஷாவால் சுற்றுச் சுவருடன் கூடிய கோட்டை கட்டப்பட்டது. நூற்றுக் கணக்கான குளங்கள் இதில் உள்ளது.


இங்கு மகாத்மா காந்தி 1915-ம் ஆண்டு முதல்1930-ம் ஆண்டுவரை வசித்தார். 1984-ம் ஆண்டு முதல் முறையாக ஆமதாபாத்தை புராதன நகரமாக தேர்வு செய்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு தொடங்கியது. இதற்காக ஆமதாபாத் மாநகராட்சி சார்பில் புராதன சின்ன ஆய்வு பிரிவும் தொடங்கப்பட்டது.


2011-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு ஆமதாபாத் நகரை புராதன நகரமாக அறிவிப்பதற்கான பட்டியலில் சேர்த்து ஆய்வு மேற்கொண்டது. இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


பாரிஸ், காரினோ, எடின்பர்க் உள்ளிட்ட நகரங்களைத் தொடர்ந்து 287 வது உலக பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் ஆமதாபாத் இணைந்துள்ளது.