வழிதவறி வந்த நாய்குட்டிக்கு உணவு அளித்த பெண்ணை, அஹமதாபாத் பகுதியை சேர்ந்த வாலிபர் வெறிகொண்டு கடித்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஹமதாபாத்தின் இஷான்பூர் பகுதியில் கடந்த டிசம்பர் 14-ஆம் நாள் நடந்த இச்சம்பத்தில் ஈடுப்பட்டவர் மரபுக்கான் பதான் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


சம்பவத்தன்று, அப்பகுதியை சேர்ந்த குமாருஜன் பானு என்ற பெண்மணி தன் வீட்டிற்கு அருகாமையில் வழிதவறி வந்துகிடந்த நாய்குட்டிக்கு உணவு வைத்துள்ளார். இதனை கண்டு ஆத்திரம் அடைந்த மரபுகான் நாய்க்கு ஏன் உணவு வைக்க வேண்டும் என கூச்சலிட்டுள்ளார். மேலும் பானு நாய்குட்டிக்கு உணவு வைப்பதாலேயே தன்னை பார்த்து அது குரைப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.


இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது, பின்னர் மரபுகான் பதான் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது இருமகள் முன் கடுமையான வார்த்தைகளால் வசைபாடியுள்ளார். ஒருகட்டத்தில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ள குமாருஜன் பானுவை பதான் கடித்துள்ளார்.


பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்து விலக்கி வைத்துள்ளனர். எனினும் இந்த சம்பவத்தின் போது கடிப்பட்டு காயமுற்ற குமாருஜன் பானு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுள்ளார் பின்னர் இதுதொடர்பாக பானு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.


இதற்கிடையில் குமாருஜன் பானுவின் மகன் இரும்பு கம்பியால் தன் தாயை கடித்த மரபுகான் பதான் மற்றும் அவரது தந்தை ஜவகத்கான் பதான் இருவரையும் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகவும் பானுவின் மகன் மீது வழக்கு தொடர்ப்பட்டுள்ளது. நாய்க்கு உணவு அளித்து உயிருக்கு ஆபத்தான் பிரச்சனைகள் வரை சந்தித்துள்ள பானுவின் குடும்பம் குறிப்பு அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.