ரயில் என்ஜின் இல்லாமல் பயணிகளுடன் பயனித்த அகமதாபாத் - பூரி எக்ஸ்பிரஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று இரவு பயணிகள் நிரம்பி பயணித்த அகமதாபாத் - பூரி எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்திலை நெருங்குகையில் ரயில் என்ஜின் இல்லாமல் வந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


ஒரிசா மாநிலம் திட்லகார்க் பகுதி ரயில்நிலையத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தை குறித்து விசாரிக்கையில் ரயிலின் சறுக்கல் பிரேக்கினை பயன்படுத்தாதால் இவ்வாறு நிகழந்ததாக தெரிகிறது. 



ரயிலில் பயணித்த பயணிகள் தங்களை காப்பாற்ற வேண்டுமாய் செய்கை காட்டுவதும், வெளியில் இருக்கும் நபர்கள் ரயில்பெட்டி சங்கிலியை பிடித்து இழுக்குமாறு தெரிவிப்பதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. பின்னர் தானை வேகத்தினை குறைத்துக்கொண்ட இந்த ரயில் நின்றப்பின் பயணிகள் இறங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


எனினும் இந்த வீடியோ முடியும் வரை ரயில் வேகம் குறையாமல் பயணிப்பதினை நம்மாள் பார்க்க முடிகிறது!