800 பொறியியல் கல்லூரிகள் மூடல்: ஏஐசிடிஇ
ஏஐசிடிஇ நாடு முழுவது உள்ள பொறியியல் கல்லூரிகளில் 800-ஐ மூட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஏஐசிடிஇ அறிவித்துள்ள அந்த 800 கல்லூரிகளிலும் கவுசிலிங்கில் யாரும் அந்தக் கல்லூரிகளைத் தேர்வு செய்யவில்லை என்பதற்காகவும், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைவது என அதன் தலைவர் அணில் தத்தாதியா தெரிவித்தார்.
ஏஐசிடிஇ-ன் விதிகளின் படி அந்தக் கல்லூரிகளில் மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் இல்லை, 30 சதவீதத்திற்கும் குறைவாகவே மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகின்றது என்றும் அதுவே கல்லூரிகளை மூடக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு, டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. செயல்பட முடியாத கல்லூரிகளின் நிலை செயல்பட முடியாத பல தனியார் பொறியியல் கல்லூரிகள் பாலிடெக்னிக் அல்லது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன.